Thursday, May 15, 2014

நீங்கள்  படத்தில்  பார்க்கும் சிறுவனின் பெயர் அப்துர்ரஹ்மான். சவுதி அரேபியாவை சார்ந்தவன். ஆரம்ப பள்ளியில் படித்து கொண்டிருந்தான்.  அவனுடன் திருகுர்ஆன்  வகுப்பில் படித்து வந்த ஒரு நண்பன்  திடீர்  என்று பள்ளிக்கு வராது போனதால் அந்த நண்பனை பற்றி விசாரித்துள்ளான்.

அப்போதுதான்  தனது நண்பன்  இறந்து விட்ட செய்தியறிந்து அதிர்ச்சி அடைந்தான். இறந்து விட்ட நண்பனுக்கு நண்மை சென்றடையும் விதத்தில் எதாவது தான தருமங்கள் செய்ய வேண்டும்  என  எண்ணி அதற்க்காக  தனது  தந்தையிடம்  உதவி கேட்டான்.


அவனது தந்தை சிறிதளவு பண உதவி செய்தார். அந்த பணத்தை கொண்டு அவன் விரும்பிய பொருளை வாங்கி நண்பனுக்காக  தர்மம் செய்வதற்கு அவனது தந்தை வழங்கிய பணம் போது மானதாக இல்லை. ஆகையால் தானே பணத்தை சேமித்து நண்பனுக்காக தர்மம் செய்ய முடிவு செய்தான்.

தினமும் அவனது செலவிற்காக வீட்டில் கொடுக்கும் பணத்தை செலவு செய்யாமல் மற்ற சிறுவர்கள் எல்லாம் பள்ளியில் விரும்பியதை வாங்கி உண்ணும் போது இவன் மட்டும் கையில் பணத்தை வைத்து  கொண்டே  நண்பனுக்காக தர்மம் செய்யவேண்டும் என்பதற்காக எதுவும் வாங்கி சாப்பிடாமல்  இருந்துள்ளான். அந்த பணத்த சேமித்துக்கொண்டே வந்துள்ளான்.

வீட்டிற்கு வந்ததும் பசியின் கொடுமையை தணிப்பதற்காக சமையலறைக்குள் சென்று விரும்பியதை எடுத்து சாப்பிட்டு கொள்வான்.  இவனது நடைமுறையில் வித்தியாசம் தெரியவே பள்ளி ஆசிரியர்கள் அவனை வற்புறுத்தி கேட்டபோது, தான் தனது நண்பனுக்காக தர்மம் செய்வதற்காக தனது  செலவிற்கு வீட்டில் தரும் பணத்தை செலவு செய்யாமல் பசியுடன் இருந்து  சேமித்து வருவதாக தெரிவித்துள்ளான்.

இதை செவியுற்ற ஆசிரியர்கள் ஆச்சரியம் அடைந்தனர். இந்த சிறுவயதில் இப்படி ஒரு அற்பணிப்பு  உணர்வா? என வியந்தனர்.  இதை அறிந்த சவுதி அரேபியாவின் கல்வி துறை அமைச்சர்  அமீர் காலித் பைஸல்  அந்த சிறுவனை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.

மேலும்  அந்த  சிறுவன் கூறும் போது இதை நான்  இறைவனுக்காகவே செய்தேன். பள்ளி நிர்வாகம் வலியுறுத்தி கேட்டதால்தான்  சொன்னேன்.  இல்லை என்றால் யாரிடமும் இதை சொல்லியிருக்க மாட்டேன்.  இனி இது போன்று ஒரு வாய்ப்பு எனக்கு வரும் போது யாருக்கும் தெரிவிக்காமல் எனது  இறைவனுக்கு  மட்டும்  அறிந்த  நிலையில்  செய்வேன் என கூறியுள்ளான்.


0 கருத்துகள்::

Post a Comment

Like This Page

Al_Quran Mp3

Popular Posts